அதிகரிக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு! வெளியான அறிவித்தல்கள்
இலங்கையில் வாழும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடிய போதே கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்படி, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் பதினைந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை பதினேழாயிரத்து ஐநூறு ரூபவாகவும், எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவு
இதேவேளை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐயாயிரம் ரூபாய் வழங்கும் குடும்பங்களுகு அந்தத் தொகை மாறாமல் வழங்குவதற்கும் குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |