இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

Ampara Sri Lanka Tourism Israel
By Laksi Oct 23, 2024 02:35 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அந்த நாட்டு தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், சில சுற்றுலாப் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறுகம்பை விவகாரம்: பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

அறுகம்பை விவகாரம்: பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

பயங்கரவாத அச்சுறுத்தல்

சமீபத்திய தகவல்களின்படி, பயங்கரவாத அச்சுறுத்தல் சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Arugambay Issue Order To Evacuate Israeli Citizens

இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை.

இந்தநிலையில்,  இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

சோள இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

சோள இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW