குடும்பங்கள் நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பம்: வெளியான தகவல்
இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37 இலட்சம் குடுமபங்கள் அஸ்வெசும பெற விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மொத்தமாக 52 லட்சம் குடும்பங்கள் வாழும் நிலையில் அஸ்வெசும நலத்திட்டத்திற்காக மூன்றில் இரண்டு குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.
அஸ்வெசும
இருப்பினும், அதில் 19 இலட்சம் குடும்பங்கள் மட்டுமே அஸ்வெசும பெறத் தகுதியானவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மில்லியன் ஏழைக் குடும்பங்களை மேம்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |