திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

Sri Lanka Eastern Province
By Rakshana MA Oct 23, 2024 07:08 AM GMT

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னக்குளம் கிராமத்திலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (22) மாலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினரால் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேங்காய் விற்பனைக்கு இன்று முதல் புதிய திட்டம்

தேங்காய் விற்பனைக்கு இன்று முதல் புதிய திட்டம்

விசாரணை

தோட்ட உரிமையாளர் தோட்ட வேலையில் ஈடுபடும் போதே குறித்த கைக்குண்டு இருப்பதை கண்டுள்ளார் . தொடர்ந்து குண்டு தொடர்பான தகவலை சம்பூர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு | Another Hand Grenade Found In Srilanka Muthur

குண்டினை செயலிழக்கச் செய்ய மூதூர் நீதவான் நீதிமன்றில் அனுமதியை பெற்றுக்கொண்டதுடன் பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து குண்டினை செயலிழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டெடுக்கப்பட்ட குண்டு தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW