கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

Ampara Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Rakshana MA Jan 16, 2025 01:24 PM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை(Ampara) டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை(14) திறந்துவிடப்பட்ட நிலையில், இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று(16) அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள்

இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும், வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள் | Ampara Flooded Due To Heavy Rains

இதன்படி அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவளக்கடை கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பெரும்போக வேளாண்மை செய்கை நிலங்களில் 2000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

விவசாயிகள் கவலை 

இந்த நிலையில், சில குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள் | Ampara Flooded Due To Heavy Rains

அதேவேளை கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் தாம் அதிகளவில் பாதிக்கப்பட்டு மீண்டெழ முடியாத நிலையில் இருக்கும் வேளையில் இவ்வருட ஆரம்பத்திலேயே அடுத்தொரு வெள்ள நிலைமை ஏற்பட்டு, அதனால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.   

சம்மாந்துறை பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்! விவசாயிகள் விசனம்

சம்மாந்துறை பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்! விவசாயிகள் விசனம்

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 



GalleryGalleryGalleryGalleryGallery