சம்மாந்துறை பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்! விவசாயிகள் விசனம்
அம்பாறை(Ampara) மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்திற்கு உட்பட்ட, செனவட்டை உடங்கா பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விவசாயிகள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இதன்படி, குறித்த பாலம் பற்றி இதற்கு பொருப்பான அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்துடன், செனவட்டை, நெடியாள்ளகண்டம், கொக்கநாரை போன்ற வயல் பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதை இதுவாக காணப்படுவதுடன் எதிர்வரும் மாதத்தில் இந்த பகுதியில் விவசாய அறுவடை நடைபெறவுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
மேலும் ,இதற்கு முதல் பெய்த அடைமழை காரணமாக, பல வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் அதிகாரிகள் பலர் நீரில் மூழ்கிய நிலங்களை பார்வையிட்டு சென்ற போதும், இது வரை எந்த நட்ட ஈடும் அரசாங்கம் வழங்கவில்லை.
இந்த நிலையில், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |