மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Dec 17, 2024 12:43 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) - கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி அதே திசையில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதியுள்ளது.

கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்: சஜித்

கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்: சஜித்

மூன்று பேர் காயம்

இந்த விபத்தில் தெய்வாதீனமாக இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன், நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து | Ambulance And Bus Accident In Batticaloa

குறித்த நோயாளர் காவு வண்டி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து, களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்ற வேளையிலேயே விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

கொரோனா கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: அமைச்சர் அளித்த பதில்

கொரோனா கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: அமைச்சர் அளித்த பதில்

பொலிஸார் விசாரணை

இதன்போது நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி, விசேட தாதிய பரிபாலகி, மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருமாக மூன்று பேர் இதில் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து | Ambulance And Bus Accident In Batticaloa

எனினும் நோயாளர் காவு வண்டியின் முன்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இது குறித்து களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW