வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

Sri Lanka Sri Lankan Peoples Money vehicle imports sri lanka Import
By Rakshana MA Feb 01, 2025 07:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) கையொப்பத்துடன் நேற்று(31) வெளியிடப்பட்டது.

இதற்கமைய, பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான வாகனங்கள், தனியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் மிதிவண்டி என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

வாழைச்சேனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

வாகன இறக்குமதிக்கு அனுமதி

மேலும், குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்கள், அரச நிறுவன விதிகளுக்கு உட்பட்டு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி | Allowed To Import Vehicles Today Sri Lanka

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை 90 நாட்களுக்குள் பதிவு செய்யத் தவறினால் 3 சதவீத தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன் அவ்வாறான வாகனத்தைப் பதிவு செய்வதற்கான செலவு, காப்பீடு மற்றும் கப்பல் கட்டணம் என்பவற்றில் 45 சதவீதத்தையும் செலுத்த வேண்டும்.

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி | Allowed To Import Vehicles Today Sri Lanka

மேலும், இதுதவிர தற்போது நடைமுறையிலுள்ள 20 சதவீத தீர்வை வரியுடன் அதற்கான 20 சதவீத நிறையிடப்பட்ட வரி அடங்கலான முழு தீர்வை வரியை இறக்குமதியாளர்களுக்கு 30 சதவீதமாகத் திருத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இன்றைய வானிலை மாற்றம்

இன்றைய வானிலை மாற்றம்

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW