பாடசாலை மாணவர்களுக்கு புத்தக கொள்வனவு: ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

Ministry of Education Kandy Anura Kumara Dissanayaka Grade 05 Scholarship examination Education
By Laksi Nov 02, 2024 04:09 PM GMT
Laksi

Laksi

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவு தொகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பின் அடிப்படையின் கீழ் தரம் 1 இற்கு 08 பாடங்கள் உட்பட புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுகம் குடா தாக்குதல் எச்சரிக்கை : ஆறுபேர் கைது

அறுகம் குடா தாக்குதல் எச்சரிக்கை : ஆறுபேர் கைது

புதிய பாடத்திட்டம்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10 ஆகிய தரங்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகமாகவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு புத்தக கொள்வனவு: ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் | Allowance To Students For Purchase Of Books Anura

புதிய பாடத்திட்டம் இப்புதிய பாடத்திட்டத்தின் கீழ் சா/த பரீட்சை 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும், உயர்தரப் பரீட்சை 2028 டிசெம்பர் மாதத்திலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலும் நடைபெறவுள்ளது.

சுகாதாரமும் உடற்கல்வி, விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் போதுமான அனுபவம் இல்லாத ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

பொதுத்தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுத்தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW