பொதுத்தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த 24 மணிநேரத்தில் 83 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் 01 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 352 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 943 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
முறைப்பாடுகள்
இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 33 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1112 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில்,230 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |