வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயமானது நேற்று (1) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹான வீட்டில் சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றில் மருத்துவ தேவைகளை முன்வைத்து பெறப்பட்ட உத்தரவின் மூலம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொஹான் ரத்வத்த தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |