சமூக நலன்புரி வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்க திட்டம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Economy of Sri Lanka Rice
By Laksi Nov 01, 2024 04:33 PM GMT
Laksi

Laksi

நாட்டில் சமூக நலன்புரி வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

டிஜிட்டல் மயமாக்குதல்

அத்தோடு, அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூக நலன்புரி வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்க திட்டம் | Action To Digitize Social Welfare Schemes

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண விநியோகத் திட்டம் மற்றும் உர மானியத் திட்டம் என்பவற்றை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கலந்துரையாடலில் டயலொக் ஆசியாடா தனியார் நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, மிலேனியம் IT நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் விஜேநாயக்க உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழுவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW