கல்முனை பாடசாலை ஒன்றின் ஆய்வுகூட மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூட மேம்பாட்டுக்காக 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் அதிபர் எம்.ஏ சலாம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை கையளித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல் றியால் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசகருமான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாபா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.எல் ஹமீட், கல்முனை 12ம்.வட்டார ஸ்ரீ.ல.மு.கா. அமைப்பாளர் எம்.எஸ். பளீல், முன்னாள் வேட்பாளர் எம் ரகுமான் உட்பட பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |