மூவின மக்களும் நாட்டிற்கு பொருத்தமான ஒருவரையே தேடுகின்றனர் : ஹரீஸ் எம்.பி

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Rukshy Sep 10, 2024 06:51 AM GMT
Rukshy

Rukshy

இன்று தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழவேண்டி பொருத்தமான ஒருவரை தேடுகின்றார்கள் எனவே நாட்டை நல்ல நிலையில் கொண்டு செல்ல சஜித் பிரேமதாசவினை நாம் ஆதரிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

"வெல்லும் சஜித்" தேர்தல் பரப்புரை கூட்டமொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

நாட்டினுடைய ஆட்சி

மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாசாவோடு நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக பேசி ஒப்பந்தம் செய்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கின்ற ஒரு முடிவுக்கு பிறகு தான் நாங்கள் அவரை ஆதரிக்கின்றோம்.

மூவின மக்களும் நாட்டிற்கு பொருத்தமான ஒருவரையே தேடுகின்றனர் : ஹரீஸ் எம்.பி | All Races Are Looking Suitable Person For Country

ஒரு ஜனாதிபதியின் மகனாகவும், ஆறு வருடங்கள் வீடமைப்பு அமைச்சராகவும் இருந்திருக்கின்றார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். அவர் ஜனாதிபதியானால் இந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு பல நாடுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தல் என்பது மிக முக்கியமானது. இதுதான் இந்த நாட்டினுடைய ஆட்சியை மாற்றப் போகின்றது.

இந்த நாட்டில் கம்யூனிச கட்சியாக ஜே.வி.பி உருவானது. 1989 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அப்பாவி சிங்களவர்கள் இவர்களின் செயலால் உயிரிழந்தார்கள். அந்த நேரம் இருந்த ஜேவிபி இப்போது தேசிய மக்கள் சக்தியாக மாறி இருக்கின்றது.

இந்த நாட்டில் ரணிலுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்றால் இந்த நாட்டில் அரகலய இருந்த போது நாட்டை பொறுப்பெடுத்து பல வேலைகள் செய்தாலும் இதனை நெருக்கடிக்கு காரணமாக இருந்த அமைச்சர்களுடன் ரணில் ஒட்டிக் கொண்டிருக்கின்றார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW