மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த மாவட்டத்தில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்கள்
இந்தநிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வோர் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எச்.எம்.சுபியான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (20) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |