அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

Ampara Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 20, 2024 11:31 AM GMT
Laksi

Laksi

அம்பாறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளில் இருந்து 9 அரச அதிகாரிகள் பணி நீக்கம்

தேர்தல் கடமைகளில் இருந்து 9 அரச அதிகாரிகள் பணி நீக்கம்

ஏற்பாடுகள் பூர்த்தி

அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் 1,88,222 பேரும் சம்மாந்துறையில் 99,727 பேரும் கல்முனையில் 82,830 பேரும் பொத்துவில் தொகுதியில் 1 இலட்சத்து 84 ஆயிரத்து 653 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு | All Arrangements Election Ampara Completed

இம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 ஆகும். தேர்தல் தினத்தில் நடந்து கொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் எனவும் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW