போலி கடிதம் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை பொலிஸாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.
"CONVICTION" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம், பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவின் பெயரும், போலியான கையொப்பமும் கொண்டதாக, சமூக ஊடக வலைப்பின்னல்களில் தற்போது பரவி வருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு சின்னம், இலங்கை உச்ச நீதிமன்ற சின்னம் மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகியவற்றைப் போலவே, சட்ட அடிப்படை இல்லாத முரண்பாடான சொற்களைப் பயன்படுத்தி, சின்னங்கள் அச்சிடப்பட்டு தயாரிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவிக்கிறது.
போலியான தகவல்
"சைபர் குற்றத் தலைமையகம் கொழும்பு, இலங்கை" என்ற இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம் இலங்கையில் இல்லை என்றும், இங்கு கூறப்பட்டுள்ள நிலைப்பாடுகள் அல்லது உண்மைகள் இலங்கை பொலிஸால் வெளியிடப்படவில்லை என்றும், அவை தவறானவை மற்றும் திரிபுபடுத்தப்பட்டவை என்றும் இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.
இது இலங்கை பொலிஸாரை சங்கடப்படுத்தும் மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட கடிதம் என்பது கவனிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தவறான தகவல்களைப் பரப்புவதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |