கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நஸிருக்கு பிரியாவிடை

Government Employee Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Apr 21, 2025 05:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளரான எம்.எம்.நஸீரின் சேவையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர் கிழக்கு மாகாண நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பிரியாவிடை நிகழ்வு

இவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வாழ்துமடல்  மற்றும் பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தனது 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் இவர், கிழக்கு மாகாணத்தில் மாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சின் செயலாளராகவும், பேரவைச் செயலக செயலாளராகவும், பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நஸிருக்கு பிரியாவிடை | Farewell For Rda Officer In Eastern Province

குறித்த நிகழ்வில், கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் த.வருணி உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

முதலாம் தவணைக்கான இறுதிக்கட்ட பாடசாலை இன்று ஆரம்பம்

முதலாம் தவணைக்கான இறுதிக்கட்ட பாடசாலை இன்று ஆரம்பம்

எங்கள் வெற்றியில் தான் மக்களின் விடியல் உள்ளது..!

எங்கள் வெற்றியில் தான் மக்களின் விடியல் உள்ளது..!

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    


GalleryGalleryGallery