எங்கள் வெற்றியில் தான் மக்களின் விடியல் உள்ளது..!

Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province Local government Election
By Rakshana MA Apr 20, 2025 12:55 PM GMT
Rakshana MA

Rakshana MA

எங்கள் வெற்றியில் தான் மக்களின் எதிர்கால விடியல் உள்ளது என சுயேட்சை வேட்பாளர்  எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபை முதலாம் வட்டாரத்தில் நேற்று (19) வேட்பாளர் சித்தி சௌதியா தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்விக்கு அரசாங்கம் கொடுக்கும் நிதிக்கு மேலதிகமாக தொண்டு நிறுவனங்களின் நிதிகளை கொண்டுவந்து நாவிதன்வெளி பிரதேச எல்லா பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யவும், இருண்ட நிலையில் உள்ள நாவிதன்வெளி க்கு வெளிச்சம் பாய்ச்சவும் நாங்கள் பெற்றுக்கொள்ள போகும் வெற்றியிலையே மக்களின் எதிர்கால விடியல் தங்கியுள்ளது.

பாசிக்குடா கடற்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

பாசிக்குடா கடற்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

மக்கள் வாக்கு

நாவிதன்வெளி பிரதேசத்தை இருண்ட பிரதேசமாக தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது.  

வளங்களை பயன்படுத்தி அவற்றை கொண்டு மக்களின் வாழ்வியலை மேம்படுத்த தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் வென்றால் மட்டுமே நிச்சயம் செய்வோம் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

எங்கள் வெற்றியில் தான் மக்களின் விடியல் உள்ளது..! | Candidate Naleer Speech At Navinthanveli

கடந்த காலங்களில் சர்வதேச உதவிகளை பெற்று நாவிதன்வெளி பிரதேச நிறைய உட்கட்டமைப்பை நாங்கள் செய்துள்ளோம். வீடமைப்பு, நீர் வழங்கல், மின்சாரம் வழங்கல், வாழ்வாதாரம் வழங்கல், உதவிகளை வழங்குதல் என நிறைய சேவைகளை அதிகாரம் இல்லாமலே செய்துள்ளோம்.

அதிகாரம் கிடைக்கும் போது உத்வேகத்துடன் நிறைய பணிகளை மக்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம். "பழைய குருடி கதவை திறடி" கதைகளையெல்லாம் ஓரங்கட்டி மக்கள் நிதானமாக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.சுவைதீன், நாவிதன்வெளி பிரதேச சபைக்கு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வீழ்ச்சியடையும் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி..!

வீழ்ச்சியடையும் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி..!

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW