8 மில்லியன் நிதியில் மருதமுனையில் வீதி புனரமைப்பு
மருதமுனையிலுள்ள (Maruthamunai) உள்ளக வீதிகள் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வேலைத்திட்டமானது சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் டீ- 100 திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஒரு அங்கமாக மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் மழை காலங்களில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக உள்ளதை நிவர்த்திக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதை சீரமைப்பு
மருதமுனை அக்பர் வீதியின் குறுக்கு வீதியான "கலாபூசணம் பீ.எம்.எம்.ஏ. காதர் வீதி" மற்றும் "மக்பூலியா வீதி" ஆகியவற்றை கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ள இந்த வீதிகளை ஹரீஸ் நேரில் சென்று பார்வையிட்டதுடன், குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
மேலும், குறித்த விஜயத்தில் சட்டத்தரணி உள்ளிட்ட பிரதேசத்திலுள்ள முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




