உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை முடிவுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் இன்று முதல் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்ற இப்பரீட்சையில் 331,185 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
பரீட்சை பெறுபேறுகள்
பரீட்சை முடிவுகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk இல் வெளியிடப்படும் எனவும், மாணவர்கள் தங்கள் பரீட்சை இலக்கத்தைப் பயன்படுத்தி முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், முடிவுகள் தொடர்பான மறு மதிப்பீடு மற்றும் முறையீடு செயல்முறைகள் குறித்த விபரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு பரீட்சைகள், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட இயற்கை அனர்த்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இதனால், மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி பரீட்சைகளை எதிர்கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |