அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் நடைபாதை பவணி
சுபீட்சமான எதிர்காலத்திற்கான கல்வி எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் விழிப்புணர்வு நடைபாதை பவணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை பவணியானது, இன்று(26) பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எ.எல்.பாயிஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நடைபவணி
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட நடைபாதை பவணி பிரதான வீதியூடாக அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ளது.
இந்நடைபாதை பவணியில் இப்பாடசாலையில் கல்வி கற்ற நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பெருந்திரளான பழைய மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









