சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Sri Lankan Peoples Sri Lankan Schools School Children
By Rakshana MA Feb 13, 2025 05:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரே வழக்கு தாக்கல் செய்வதாகவும் அவரது பணிக்குழாத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

வழக்குகள் தாக்கல்

மேலும், சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியான பிரிவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணைகளை விரைவில் முடிவுறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Action Taken Regarding Children In Sri Lanka

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்கின்றன.

இதேவேளை காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

மட்டக்களப்பில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

மட்டக்களப்பில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

அருள் அள்ளித்தரும் மாதத்தை வரவேற்க தயாராகுவோம்

அருள் அள்ளித்தரும் மாதத்தை வரவேற்க தயாராகுவோம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW