அருள் அள்ளித்தரும் மாதத்தை வரவேற்க தயாராகுவோம்
ரமழான் மாதம், இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் நோன்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
ரமழான் என்பது "சுட்டெரித்தல்" என்று பொருள் தரும் ஒரு அரபு வார்த்தையிலிருந்து உருவானது.
இது தீமைகளைச் சுட்டெரித்து நன்மையின்பால் மக்களைக் கொண்டு சேர்க்கிறது.
நோன்பு இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் நான்காவது, ரமழானில் இது நடுநாயகமாகப் போற்றப்படுகிறது.
இம்மாதத்தில், முஸ்லிம்கள் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், பருகாமல், தீய எண்ணங்களிலிருந்து விலகி இருப்பார்கள். இது சுயக்கட்டுப்பாட்டை கற்றுத்தருவதோடு, பசியின் கொடுமையை உணரவைக்கிறது.
திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் இது. ரமலானில் ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானம் வழங்குவதும், தொழுகைகள் மேற்கொள்வதும் சிறப்பானது. உடல், மனம் சுத்தமாக பாவங்கள் மன்னிக்கப்படும் புண்ணிய மாதம் இது. ரமழான் மாதம் நன்மை, ஒழுக்கம் நிறைந்த சமூகச் சூழலை உருவாக்குகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |