அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : ஒருவர் பலி

Colombo Sri Lanka Accident
By Shalini Balachandran Jul 24, 2024 05:07 AM GMT

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

லொறியின் சாரதி

அத்தோடு, விபத்தில் பின்னால் சென்ற லொறியின் சாரதி, சாரதி உதவியாளர் மற்றும் முன்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதுடன் பின்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : ஒருவர் பலி | Accident On Expressway

மேலும், இது தொடர்பாக தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ சோதனைச் சாவடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை அல் ஸலாம் சிறுவர் இல்லத்தை மேம்படுத்த ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு

சம்மாந்துறை அல் ஸலாம் சிறுவர் இல்லத்தை மேம்படுத்த ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW