சம்மாந்துறை அல் ஸலாம் சிறுவர் இல்லத்தை மேம்படுத்த ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு

Ampara Sri Lanka Eastern Province
By Rukshy Jul 24, 2024 04:41 AM GMT

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு சிறுவர் இல்லமான சம்மாந்துறை அல் ஸலாம் சிறுவர் இல்லத்தை மேம்படுத்தி நவீன முறையில் அமைக்க முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ்,  டி-100 வேலைத்திட்டத்தின் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் நான்கு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்ல நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் நேரடியாக அந்த சிறுவர் இல்லத்திற்கு விஜயம் செய்து அங்கிருக்கும் சிறுவர்களிடம் கலந்துரையாடியதுடன் நிர்வாகிகளிடமும் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே அதிக வாக்குகள்

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே அதிக வாக்குகள்

நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணம்

இதன்போது தனது நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணத்தை நிர்வாகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கையளித்தார்.

சம்மாந்துறை அல் ஸலாம் சிறுவர் இல்லத்தை மேம்படுத்த ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு | Funds Haris Mp Development Children S Home

இந்நிகழ்வில் சம்மாந்துறை சிறுவர் நிலைய பொறுப்பதிகாரி எம்.சி.எம். சிப்கான், நாடாளுமன்ற உறுப்பினரின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா, உயர் உட்பட சம்மாந்துறை அல் ஸலாம் சிறுவர் இல்ல முகாமைத்துவ குழுவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய வானிலை தொடர்பிலான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பிலான முன்னறிவிப்பு

இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை

இஸ்ரேலிய படையினரை மிரட்டிய கனேடிய பிரஜை சுட்டுக் கொலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery