கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து : மௌலவி ஒருவர் ஸ்தலத்தில் மரணம்

Ramadan Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Mar 16, 2025 08:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்ற விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்றையதினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவி எம்.எஸ்.எம்.ஸபீர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கம்பளை புகையிர நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டம்

கம்பளை புகையிர நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டம்

ஸ்தலத்தில் மரணம்

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரச போக்குவரத்து பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து : மௌலவி ஒருவர் ஸ்தலத்தில் மரணம் | Accident Near Kallady Bridge

இதன்போது மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பயணித்த மௌலவி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கில் தொடரும் பிரச்சினைகள் : நிரந்தர தீர்வுக்கான கோரிக்கை முன்வைத்துள்ள ரவூப் ஹக்கீம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW