கிழக்கு - வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து, மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பயணிக்கையில், முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது, நேற்று(14) இரவு 10.45மணியளவில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கு பல்கலைக்கழகம்..
இதன்போது, குறித்த பல்கலைக்கழக்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்கள் செங்கலடியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்து பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பாதசாரி கடவை பகுதியில் எதிர்பக்கமாக முச்சக்கரவண்டியை திருப்பும் போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன், விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரும் மூன்று பல்கலை மாணவர்களும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |