கைவிடப்பட்ட தங்கச் சுரங்கமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்கள்
தென்னாபிரிக்காவில்(South Africa) கைவிடப்பட்ட தங்கச் சுரங்கமொன்றிலிருந்து சட்டவிரோத சுரங்கத்தொழிலாளர்கள் பலரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இதன்படி, குறித்த சுரங்கத்தின் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் இதில் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தென்னாபிரிக்காவில் பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தில் உள்ள மோசமான நிலைமையைக் காட்டும் காணொளிகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
சுரங்கத்தொழிலாளர்கள்
அதில் ஏராளமான சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் பல மாதங்களாக நிலத்தடியில் வசித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, நேற்றுமுதல், சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்மேற்கே 145 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சட்டவிரோத சுரங்கமொன்றில் 100 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |