தேர்தல் கடமைகளில் இருந்து 9 அரச அதிகாரிகள் பணி நீக்கம்

Hambantota Crime Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 20, 2024 09:32 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்பது அதிபர்கள், ஒரு பிரதி அதிபர், நான்கு ஆசிரியர்கள், ஒரு பொது சுகாதார பரிசோதகர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் மூன்று வைத்தியர்கள் உட்பட 19 அரச அதிகாரிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு நிலையத்திற்கு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் : ஐயாயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் : ஐயாயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

கடமைகளில் இருந்து நீக்கம்

இதன் அடிப்படையில் பல முறை மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் 19 அதிகாரிகளில் 9 பேர், தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் இருந்து 9 அரச அதிகாரிகள் பணி நீக்கம் | 9 Gov Officers Removed Election Duties Hambantota

இந்நிலையில், தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் வெற்றிடமான இடத்திற்கு தற்போது அதிகாரிகள் நிரப்பப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

இலங்கையை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ச

இலங்கையை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ச

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW