பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கையில் 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Police Investigation General Election 2024
By Laksi Oct 22, 2024 09:30 AM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்கிய 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்தோடு, பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

கண்காணிப்பு நடவடிக்கை

பொதுத் தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் என்பதால் கண்காணிப்பு நடவடிக்கைகளும், பொலிஸ் பாதுகாப்பு அனைத்து தொகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கையில் 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் | 8000 Observers Arrive For General Election

இந்த முறை பெப்ரல் அமைப்பு, 30 வெளிநாட்டவர்கள் உட்பட 5000 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW