மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் 31 மாணவர்கள் திடீர் சுகயீனம்
மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயத்தில் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த உணவு ஒவ்வாமை காரணமாக 31 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று(11) செவ்வாய்க்கிழமை பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் இடியப்பம், புட்டு மற்றும் நூடில்ஸ் உணவுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை பாடசாலை மாணவர்கள் உண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
இந்த நிலையில் பகல் ஒரு மணியளவில் சில மாணவர்கள் வாந்தி எடுக்க ஆரமம்பித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் உடனடியாக கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டும் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து சிற்றுண்டிசாலை நடாத்திவந்த அதன் உரிமையாளரான பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |