வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய சீன அரசாங்கம்

Sri Lanka China Climate Change Weather
By Laksi Oct 22, 2024 01:08 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங் இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

இதன்போது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் ஆராயப்பட்டது.

வெள்ள நிலைமை

அத்தோடு, எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய சீன அரசாங்கம் | 30 Million Rupees Aid From China To Sri Lanka

அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலில் மக்கள் எம்மோடு சேர்ந்து அரசியல் பலத்தை வழங்க வேண்டும்: டக்ளஸ் அழைப்பு

பொதுத் தேர்தலில் மக்கள் எம்மோடு சேர்ந்து அரசியல் பலத்தை வழங்க வேண்டும்: டக்ளஸ் அழைப்பு

ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW