திருகோணமலையில் பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய மூன்று சுயேச்சைக் குழுக்கள்
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆணையாளருமான சர்மிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுயேச்சைக் குழுக்கள் உதவி ஆணையர் ஆர். சசிலன் மேற்பார்வையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல்
அத்தோடு, ஒரு குழுவில் ஏழு பேர் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு குழுவும் 14000 ரூபாவை வைப்பிலிட வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |