பேருந்து கட்டணம் குறைப்பு: மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lanka Transport Fares In Sri Lanka Srilanka Bus
By Laksi Oct 02, 2024 10:55 AM GMT
Laksi

Laksi

அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில், பயணிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

தொலைபேசி இலக்கம் 

இந்தநிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறையிட ஆணைக்குழுவின் 1955என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 25 95 555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் குறைப்பு: மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Legal Action Against Overcharging Buses

மேலும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மற்றும் மாகாண பேருந்து சேவை வழங்குநர்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மாகாண அதிகார சபைக்கு 1958 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4.24% திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் : மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் : மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW