ஏழு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி விசேட பேச்சுவார்த்தை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பானது இன்று (02) இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
கலந்துரையாடல்
இதன்படி, கியூபா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |