இலங்கையில் இதுவரையில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டில் இதுவரையில் 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 220 ஆண்களும் 37 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் துணைக் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிய 69 உள்ளுர் பிரஜைகளும் 33 வெளிநாட்டுப் பிரஜைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புகள்
பொலிஸாரின் உயிர் காப்புப்பிரிவினர் இவ்வாறு நீரில் மூழ்கியவர்களை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டில் 135 பெண்கள் உள்ளிட்ட 645 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பரீட்சயமற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீராடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மரணத்திற்கான காரணம்
மது போதை காரணமாக அதிகளவான நீரில் மூழ்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சுற்றுலாப் பயணங்களின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் நீர்நிலைகளில் நீராட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |