புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை வெளியானது

Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination
By Laksi Sep 02, 2024 01:23 PM GMT
Laksi

Laksi

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கால அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும்.

அத்தோடு, அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அனுமதி அட்டைகள்

இந்த நிலையில், 2,649 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை வெளியானது | 2024 Grade 5 Scholarship Exam Time Table

பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 668 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 668 பேர் கைது

நிகழ்நிலையில் திருத்தம்

இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை வெளியானது | 2024 Grade 5 Scholarship Exam Time Table

குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று (02) முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் திருத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW