கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் நுழைந்த இருவர் கைது

Ampara Eastern Province Crime Kalmunai
By Laksi Dec 24, 2024 04:15 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara )மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) கல்முனை தலைமையக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதி இன்றி உட்பிரவேசித்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரியினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இருவர் கைது

குறித்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இருவரையும் கைது செய்த கல்முனை தலைமையக பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் நுழைந்த இருவர் கைது | 2 People Arrested Entering Hospital In Ampara

மேலும் கைதானவர்கள் வைத்தியசாலை பணிப்பாளரின் முன் அனுமதி இன்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து குறித்த வைத்தியசாலையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடி முரண்பாடான கருத்துக்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேலதிக விசாரணை

எனினும் கைதானவர்கள் வழமை போன்று தாங்கள் புதிய ஆண்டிற்கான கலண்டர்களை அரச தனியார் திணைக்களங்களுக்கு கொழுவி அடிப்பதற்கு சென்றதாகவும் அதன் போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் நுழைந்த இருவர் கைது | 2 People Arrested Entering Hospital In Ampara

இவ்விடயம் தொடர்பில் குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் கசிப்பு நிலையம் முற்றுகை : அதிரடிப்படை சுற்றிவளைப்பு

சம்மாந்துறையில் கசிப்பு நிலையம் முற்றுகை : அதிரடிப்படை சுற்றிவளைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW