புத்தளத்தில் இரண்டு யானைகள் உயிரிழப்பு
புத்தளத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை புத்தளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எரந்த கமகே இன்று (21) குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், புத்தளம்- ஆனமடுவ பிரதேசத்தில் 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
யானைகள் உயிரிழப்பு
இந்த யானை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, புத்தளம், வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் வீடொன்றிற்கு பின்புறத்தில் உள்ள காணியொன்றில் மின்சாரம் தாக்கி 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த காணியின் உரிமையாளர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தனது காணியில் மின்சாரத்தை பொருத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை
இதற்கு முன்னரும் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த காணியின் உரிமையாளருக்கு எதிராக ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |