மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மாணவி

Sri Lanka Police Batticaloa Hospitals in Sri Lanka Eastern Province Crime
By Rakshana MA Feb 23, 2025 08:03 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு, மாணவி பொலிஸாரால் கைது செய்யப்ட்டுள்ளார். 

திறைசேரி உண்டியல் விற்பனை : மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

திறைசேரி உண்டியல் விற்பனை : மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

விசாரணை

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் 18 வயதுடைய மாணவி  நிறைமாத கர்ப்பிணியான நிலையில் சாதாரண வயிற்றுவலி என தெரிவித்து மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மாணவி | 18Yr Old Student Birth Baby And Throws In Batti

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு வயிற்றுவலிக்கான ஊசி மூலமாக வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியாக வைத்தியசாலை வந்த அந்த பெண், அதிகாலை 5 மணியளவில் மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பெற்றுள்ளார்.

குழந்தையை அங்குள்ள யன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்துள்ளார்.

புதிய வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள துணை மருத்துவ பயிற்சியாளர்கள்

புதிய வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள துணை மருத்துவ பயிற்சியாளர்கள்

மீட்கப்பட்ட குழந்தை 

யன்னலின் கீழ் காணப்பட்ட பிளேற்றில் பகுதியில் விழுந்த குழந்தையின் அழுகுரல் அங்குள்ள தாதியர்களால் மீட்டெடுக்க உதவியுள்ளது.

குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மாணவி | 18Yr Old Student Birth Baby And Throws In Batti

இதேவேளை குறித்த குழந்தையும், தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பூரில் நிறுவப்படவுள்ள சூரிய மின் வலு உற்பத்தி நிலையம்!

சம்பூரில் நிறுவப்படவுள்ள சூரிய மின் வலு உற்பத்தி நிலையம்!

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW