யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 10, 2024 10:31 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 707 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து, சந்தேகநபர்களிடமிருந்து 294 கிராம் 76 மில்லி கிராம் ஹெரோயின், 297 கிராம் 485 மில்லி கிராம் ஐஸ், 11,746 கஞ்சா செடிகள் மற்றும் 3,142 கிராம் 372 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது | Yukthiya Operation Sri Lanka

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 13 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 09 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை

அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW