ஏறாவூரில் இனப்பிரச்சினையை தூண்டும் யூடியூபர்! சபையில் கண்டனம் தெரிவித்த உறுப்பினர்
பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கில் ஏறாவூரில் இனப்பிரச்சினையை உண்டாக்கும் யூடியூபர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாலி நளீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(08) இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுவான சில பிரச்சினைகளை பேச வேண்டும் எனும் நோக்கில் இதை பதிவு செய்கின்றேன். IODPP எனும் யூடியூபர், இதன் உரிமையாளர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்.
தன்னுடைய வருமானத்திற்காக எது உண்மை எது பொய் என ஆராயாமல் பதிவிடுகின்றார். இதன்படி எந்த வித அடிப்படையான ஆதாரமும் இன்றி அங்குள்ள பள்ளிவாயல்களில் தவறான வழிநடத்தல்கள் நடைபெறுகின்றன என பதிவிட்டுள்ளார்.
இது கடந்த கால அரசாங்கத்தில் இன ரீதியிலானபிளவுகளுடனான ஆட்சியில் உருவானது. அதே ஆரம்பம் தான் இன்று தலைதூக்க ஆரம்பிக்கின்றது.
ரமழான் மாதம் வந்துவிட்டால் போதும் ஸஹ்ரான் என்பார்கள், கிரிஷ் மனிதன் என்பார்கள், பள்ளியிலே பிரச்சினை என்பார்கள் எல்லாம் கூறுவார்கள்.
சட்ட நடவடிக்கை
இதிலும் கவனிக்க வேண்டிய விடயம், ஸஹ்ரானை யார் உருவாக்கினார்கள்? யார் இதனை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார்கள்? அனைத்து உண்மைகளும் சர்வதேசத்திற்கே தெரியும். நமது நாட்டு ஜனபதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் தெரியும்.
இவ்வாறிருக்க இன்னும் அதிகமான பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பும் இவ்வாறான யூடியூப் செனல்களை தடை செய்ய வேண்டும்.
மேலும் இதற்காக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |