ஏறாவூரில் விபத்து: சம்பவ இடத்தில் உயிரிழந்த இளைஞர்

Batticaloa Sri Lankan Peoples Accident Death
By Rakshana MA Jul 24, 2025 11:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - ஏறாவூர் (Eravur) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 03 மணியளவில் மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியோரத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவில் பயணிகளுடன் மாயமான விமானம் : அனைவரும் பலி

ரஷ்யாவில் பயணிகளுடன் மாயமான விமானம் : அனைவரும் பலி

விபத்து சம்பவம் 

மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து - வீதியோரத்தில் இருந்த கொங்கிரிட் தூணில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இளைஞன் சமபவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரில் விபத்து: சம்பவ இடத்தில் உயிரிழந்த இளைஞர் | Youth Dies In Eravur Accident Today

ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் ஏறாவூர் சென்ற வேளையிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞனின் சடலமானது, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டடு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

வடிகான் திருட்டு குற்றச்சாட்டில் கைதான நகரசபை உறுப்பினர்! நீதிமன்ற உத்தரவு

வடிகான் திருட்டு குற்றச்சாட்டில் கைதான நகரசபை உறுப்பினர்! நீதிமன்ற உத்தரவு

திருகோணமலையில் யானை தாக்கியதில் ஒருவர் பலி!

திருகோணமலையில் யானை தாக்கியதில் ஒருவர் பலி!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW