ரஷ்யாவில் பயணிகளுடன் மாயமான விமானம் : அனைவரும் பலி
ரேடாரில் இருந்து காணாமல் போன ரஷ்ய பயணிகள் விமானத்தின் சிதைவுகள் சீன - ரஷ்யா எல்லைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஃபார் ஈஸ்ட் பகுதியில் சுமார் 50 பேருடன் பயணம் செய்த An-24 வகை பயணியர் விமானத்துடன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தொடர்பை இழந்துள்ளனர்.
காணாமலாகிய விமானம்
இந்த சம்பவம் தொடர்பாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சைபீரியா பகுதியைச் சேர்ந்த "அங்காரா" என்ற விமான நிறுவனம் இயக்கும் இந்த விமானம், சீனாவை ஒட்டிய அமூர் பகுதியில் உள்ள டிந்தா என்ற நகரை நோக்கி செல்வதற்குள் ராடார் திரைகளில் இருந்து மறைந்துவிட்டது என்று ரஷ்ய உள்ளூர் அவசர நிலைய அமைச்சகம் தெரிவித்தது.
தகவலின்படி, விமானத்தில் 43 பயணிகள் (அதில் 5 குழந்தைகள்) மற்றும் 6 பணியாளர்கள் இருந்ததாக ஆளுநர் வாசிலி ஒர்லொவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், "விமானத்தை தேட தேவையான அனைத்து படைகளும் மற்றும் வசதிகளும் இயக்கப்பட்டுள்ளன" என்று அவர் தனது டெலிகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |