இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!
இலங்கை மாவனெல்லையை சேர்ந்த 21 வயது மாணவரான முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்பவர் கடந்த 9 மாதங்களாக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
முன்னதாக, 2024 அக்டோபரில் இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தமது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாத காரணத்துக்காக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், இன்ஸ்டாகிராம் காணொளி தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவரின் வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தரப்பை கோடிட்டு பிபிசி சிங்கள சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |