அம்பாறையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Ampara Sri Lanka Police Investigation Eastern Province Crime
By Laksi Dec 02, 2024 12:44 PM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara )-கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது கடந்த சனிக்கிழமை (30) பாண்டிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

மேலதிக விசாரணை

குருநாகல் பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது | Youth Arrested With Ice Drug In Ampara

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கல்வி அமைச்சுக்கு முன் ஏற்பட்ட பதற்றம் : போராட்டத்தின் பின்னணி

கல்வி அமைச்சுக்கு முன் ஏற்பட்ட பதற்றம் : போராட்டத்தின் பின்னணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW