கல்வி அமைச்சுக்கு முன் ஏற்பட்ட பதற்றம் : போராட்டத்தின் பின்னணி
பாடசாலை அபிவிருத்தியில் பங்கேற்கும் குழுவொன்றினால் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று (02) இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
இதனால் பதற்ற நிலை உருவாகியுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னணி
கடந்த 4வருடங்களாகப் பாடசாலை அபிவிருத்திக்குழுவில் இருந்ததுடன் மாணவர்கள் கற்பித்தும் வருகின்றமையால் தங்களையும் ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஈடுபட்டிருந்த சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |