புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Dec 10, 2024 09:30 AM GMT
Laksi

Laksi

புத்தளம் (Puttalam)- நுரைச்சோலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தவறுதலாக வீழ்ந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நுரைச்சோலை- ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

உயிரிழப்பு

சம்பவம் குறித்து தெரிய வருகையில், பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி | Young Man Died In Accident In Puttalam

இதன்போது பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக வீழ்ந்துள்ள நிலையில் பின்னால் வருகை தந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் குறித்த இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி! கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசாங்கம்

வாகன இறக்குமதிக்கு அனுமதி! கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசாங்கம்

கைது 

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி | Young Man Died In Accident In Puttalam

மேலும் ,விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்திற்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்திற்கான திகதி அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW