ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்திற்கான திகதி அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Narendra Modi India
By Laksi Dec 10, 2024 09:07 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (10) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

உத்தியோகபூர்வ கலந்துரையாடல்

இந்தநிலையில், டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் (Narendra Modi) உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்திற்கான திகதி அறிவிப்பு | Sl President Anura To Visit India

மேலும், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி! கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசாங்கம்

வாகன இறக்குமதிக்கு அனுமதி! கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசாங்கம்

காத்தான்குடியில் சுற்றுலாப்பயணியிடம் கொள்ளையிட்ட நபர் கைது

காத்தான்குடியில் சுற்றுலாப்பயணியிடம் கொள்ளையிட்ட நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW